“நாங்களும் போராடுவோம்”- ஜூலை 25-ல் நாதக ஆர்ப்பாட்டம்: சீமான்

 
பிரபாகரன் படம் வெட்டி ஒட்டப்பட்டதா? திராவிட நாய்கள்.. சீமான் பரபரப்பு பேட்டி

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவாகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.


நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரையிலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தை கலைப்பதற்கும், கூட்டம் அதிகரிப்பதை தவிர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவாகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது. நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை, இளைஞர் பாசறை சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகே ஜூலை 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.