"நீட் விலக்குதான் இதற்கு உடனடி தீர்வு" -தவெக தலைவர் விஜய் கருத்து!

 
tt

நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

tt

சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய விஜய் , நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் தமிழ்நாட்டில் கிராமப்புற, பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்கள் ஏழை எளிய மாணவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரானது.  தொடர்ந்து நடந்துவரும் குளறுபடிகளால் நீட் | தேர்வு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இனி நாடு முழுவதும் நீட் தேர்வு தேவை இல்லை என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். நீட் விலக்குதான் இதற்கு உடனடி தீர்வுநீட் விலக்கு தொடர்பாக உடனே எதுவும் நடக்காது; அப்படியே நடந்தாலும் அதை நடக்கவிட மாட்டார்கள்.

gg

எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்தேன்; ஆனால், நீட் பற்றி பேச வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டுதான் வந்தேன் நீட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; நாடு முழுவதும் நீட் தேர்வே தேவையில்லை. ஜாலியாக படியுங்கள் stress எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டாம்; வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம்; மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்