“பகல் 1.30 மணிக்கு தேர்வு மையங்களின் நுழைவுவாயில் பூட்டப்படும்”- நீட் மறுதேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

 
neet-s4

வருகிற ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட்-யுஜி மறுதேர்வை எவ்வித குளறுபடிகளும் இன்றி, மிகச் சுத்தமாகவும் சுமூகமாகவும் நடத்துவதை உறுதி செய்ய மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 


வருகிற ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட்-யுஜி மறுதேர்வை எவ்வித குளறுபடிகளும் இன்றி, மிகச் சுத்தமாகவும் சுமூகமாகவும் நடத்துவதை உறுதி செய்ய மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவிற்குள் 551 நகரங்கள், வெளிநாடுகளில் 14 நகரங்களில் நாளை மறுநாள் நீட் மறு தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாலை 6.20 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும், பகல் 1.30 மணிக்கு தேர்வு மையங்களின் நுழைவுவாயில் பூட்டப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. காலை 11 மணி முதல் 1.30  மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என்றும், அறிவுறுத்தியுள்ளது.

ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட்-யுஜி மறுதேர்வுக்கான ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ள  மத்திய கல்வி அமைச்சகம், 36 மூத்த அதிகாரிகள், நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் சென்று தேர்வுப் பணிகளை நேரடியாக ஒருங்கிணைக்க களமிறக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.