நீட் தேர்வு அச்சத்தில் அரியலூர் மாணவி தற்கொலை!!

 
tn

நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

neet

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாளை நீட் நுழைவுத்தேர்வு நடக்கிறது. தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும் நிலையில், 18.72 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர்.இந்நிலையில் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூர் ரயில்வே காலனியை சேர்ந்த நிஷா என்ற மாணவி   தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி நிஷாந்தி ஏற்கனவே நீட் தேர்வு எழுதிய நிலையில் மீண்டும் 2 ஆம் முறையாக தேர்வு எழுத தயாராகி வந்தார். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த  மாணவி, தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று இரவு சமையலறைக்கு சென்ற தாய் உமா, மகள் நிஷாந்தி  தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

tn

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த  காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிபோசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் மாணவியின் மரணம் குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து கூறியுள்ள அரியலூர் டிஎஸ்பி வெங்கடேசன் , மாணவி நிஷாந்தி ஆங்கிலத்தில் தனது குடும்பத்தினருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளதாகவும் , அதில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் தனது அப்பா அரியலூரில் வந்து தங்கி இருக்க வேண்டும் என்றும் , நீட் தேர்வில் வேதியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கடினமாக உள்ளதால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மாணவி நீட் தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.