'நீங்கள் நலமா' திட்டம் இன்று தொடக்கம்!

 
stalin

தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் உரிய முறையில் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்யும் ‘நீங்கள் நலமா' திட்டத்தை இன்று (மார்.06) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
stalin

கடந்த 4ஆம் தேதி மயிலாடுதுறையில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது பேசிய அவர், அரசுத் திட்டங்களின் பயன்கள் உரிய மக்களை சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ள மார்ச் 6ஆம் தேதி 'நீங்கள் நலமா?' என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. பொதுமக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் அரசுத் திட்டங்கள் செம்மைப்படுத்தப்படும்.

stalin
மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறைச் செயலாளர்கள் மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளை கேட்டறிவார்கள். முதலமைச்சராகிய நானே நேரடியாக மக்களை தொடர்புகொண்டு பேசுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.