“சீமான் பாஜகவின் கைக்கூலியாக மாறி உள்ளார்”- நாதகவிலிருந்து விலகிய மேலும் ஒரு நிர்வாகி குற்றச்சாட்டு

 
அ

ஜெயங்கொண்டாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜகவின் கைக்கூலியாக மாறி உள்ளதாக அக்கட்சியிலிருந்து விலகிய மண்டல செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரிவினை மத அரசியலை தவிர்த்திடுவோம்! – சீமான் வேண்டுகோள்


அரியலூர் மாவட்டம் நாயகனைப்பிரியாள் கிராமத்தைச் சேர்ந்த நீல மகாலிங்கம் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளராக இருந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 10,000 வாக்குகள் பெற்றார். இந்நிலையில் அவர் மற்றும் அவருடன் 70-க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீல மகாலிங்கம், “நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் குழப்பங்களாலும் திராவிட எதிர்பாலும் சங்பரிவார் அமைப்பின் ஆலோசனையின் பேரில் ரஜினியை சந்தித்து வந்த பின் திராவிட மாடலை எதிர்க்க முடியாத பாஜக சீமான் மூலம் திராவிடத்தை எதிர்த்து வருகிறார். தமிழ் தேசியம் என்ற ஒற்றை குரலை வைத்துக்கொண்டு சரியான பாதையில் சீமான் செல்லவில்லை. மேலும் கட்சியின் நிர்வாகத்தையும் சரியாக கையாளவில்லை என்ற காரணத்தால் தான் வகித்த மண்டல செயலாளர் பொறுப்பில் இருந்தும் கட்சியிலிருந்தும் விலகி என்னுடன் 70-க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டோம். மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி பொற்கால ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்பாட்டை ஒட்டியே இக்கட்சியில் இணைந்துள்ளோம்.

பாஜகவின் கைக்கூலியாக சீமான் மாறிவிட்டார் : கட்சியிலிருந்து விலகிய செயலாளர்  பேட்டி - Sathiyam TV

தொடர்ந்து நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகி வருவதற்கு நிர்வாக சிக்கல்தான் காரணம். தான்தோன்றித்தனமாக சீமான் முடிவெடுத்து வருகிறார். தமிழ் தேசியம் மற்றும் தமிழின தலைவர் பிரபாகரன் என்ற ஒற்றைக் காரணத்தை வைத்து அவர் பின்னால் சென்றோம். ஆனால் திராவிடத்தை எதிர்க்க வேண்டும் என்ற காரணத்தால் பிஜேபியின் கைக்கூலியாக மாறி இருக்கிறார். அதனால் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் வெளியேறி வருகிறோம். இன்னும் பலர் வெளியேறுவார்கள் அரியலூர் மாவட்டத்தில் இருந்தும் நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் தொண்டர்களின் விலகி திமுகவில் இணைவார்கள்” என்றார்.