தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டேன் - நடிகை நயன்தாரா குற்றச்சாட்டு

 
nayanthara

நடிகர் தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக நடிகை நயன் தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது திருமணம் தொடர்பான ஆவணப்படத்தில் முக்கிய பாடலை பயன்படுத்த தனுஷ் முட்டுக்கட்டை போடுவதாக குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடலை பயன்படுத்த தனுஷ் அனுமதி தரவில்லை எனவும், தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நயன்தாரா குற்றம் சாட்டியுள்ளார். 

உங்களைப்போல் அப்பா, அண்ணன் என குடும்ப பின்னணி வைத்து நான் சினிமாவுக்கு வரவில்லை எனவும், என் மீதும் தனது கணவர் விக்னேஷ் சிவன் மீதும் தனுஷ் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும் நடிகை நயன்தாரா குற்றம் சாட்டியுள்ளார். தனது ஆவணப்படத்தின் டிரைலரில் வெளியான 3 நொடி காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளீர்கள் எனவும், இது மிகவும் தவறான செயலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் மேடையில் அன்பு போல பேசுவதும் நேரிடையாக இருப்பதற்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன என குறிப்பிட்டுள்ள நயன் தாரா, மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.