விஜய் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் - நயினார் நாகேந்திரன்..!

 
1 1

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணத்தின் ஒருபகுதியாகக் கரூரில் பேசியதாவது 

பண்டிகை காலங்களில் டாஸ்மாக்கில் எத்தனை கோடிக்கு மது விற்கலாமென திமுக அரசு திட்டமிடுகிறது என்றும் மது விற்பனையை தவிர திமுக அரசிடம் வேறு எந்தத் திட்டமும் கிடையாது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

டெல்டாக்காரன் எனக் கூறிவிட்டு விவசாயிகளைச் சட்டவிரோதமாகக் கைது செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் விஜய் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுகவினர் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்றும் திமுக ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என்பதை கரூர் மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.