பாக்யராஜின் மறைவு தமிழ் சினிமாவிற்குப் பேரிழப்பு - நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி!
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள இரங்கல் பதிவில், ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு, இன்றும் அவரது படைப்புகள் மிகச்சிறந்த பாடங்களாகத் திகழ்கின்றன என தெரிவித்துள்ளார்.
எளிய கதைக்களங்கள், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றைத் தனது தனித்துவமான பாணியில் நேர்த்தியாக இணைத்து, எண்ணற்ற தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கக்கூடிய காலத்தால் அழியாத படைப்புகளை அவர் தமிழ் சினிமாவிற்கு வழங்கியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது திரைப்படங்கள் தமிழ் சினிமா ஆர்வலர்களின் இதயங்களில் என்றென்றும் நீங்காத இடம்பிடித்திருக்கும். அவரது கலைப் பயணமும் சாதனைகளும் வருங்கால இயக்குநர்களுக்கும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கும் என்றென்றும் வழிகாட்டும் ஒளியாகத் திகழும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு து ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் “திரைக்கதை மன்னன்” என்று போற்றப்பட்ட இயக்குநர் திரு. பாக்யராஜ் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி என்னை மிகுந்த துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
— Nainar Nagenthran (@NainarBJP) June 27, 2026
ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு அவரது படைப்புகள் இன்றளவும் சிறந்த… pic.twitter.com/rp65tdgYGd

