மகளிர் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள் : முதலமைச்சர் மு.கஸ்டாலின் வெளியிட்டார்..

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில், பெண்களுக்கான 9 அதிரடி அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு காவல்துறையில் 1973ம் ஆண்டு தான் முதன் முதலாக மகளிர் போலீஸார் இணைக்கப்பட்டனர். இந்நிலையில் காவல்துறையில் பெண்காள் இணைந்து 50 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் பொன்விழா கொண்டாட்டம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முழுக்க முழுக்க மகளிர் போலீஸாரால் நடத்தப்படும் இந்த விழாவில் டி.ஜி.பி., காவல் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
அணிவகுப்பு மரியாதை, சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் நிகழ்த்தி பெண் போலீசார் அசத்தினர்.. இந்த நிகழ்ச்சியில் அவள் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்பு தபால் தலையையும் வெளியிட்டார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் மகளிர் போலீஸாருக்கான பொன்னான 9 அறிவிப்புகளையும் முதல்வர் வெளியிட்டார். அவை “
▪️ ரோல் கால் என்ற காவல் வருகை அணிவகுப்பு 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு நடைபெறும்.
▪️ சென்னை மற்றும் மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
▪️ அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனி ஓய்வு அறை கட்டித் தரப்படும்.
▪️ தேவையான அனைத்து இடங்களிலும் காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்.
▪️ கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும் ஆண்டு தோறும் வழங்கப்படும்.
▪️ பெண் காவலர்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு மற்றும் பணியிட மாறுதல் வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்படும்.
▪️ பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும்.
▪️ பெண் காவலர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண காவல் துறையில் பெண்கள் என்ற தேசிய மாநாடு ஆண்டு தோறும் நடத்தப்படும்.
▪️ பெண் காவலர்களின் நலனுக்காக பணி ஆலோசனை வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும்.” என்று தெரிவித்தார்.