வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு- தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் ஒப்புதல்

 
ச் ச்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் குழாய் மூலமாக வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் 48 கோடி மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு…… சென்னையில் சப்ளை தொடங்கியது |  eTamil News | E-Tamil News | Tamil News Live

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இறக்குமதி செலவை குறைப்பதற்காகவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க வீடுகளுக்கு குழாய் மூலமாக இயற்கை எரிவாயு வழங்கும் வகையில் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இதன்படி தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அளித்தது. இதில் சென்னை, திருவள்ளூர், நாகை மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கும் மூலமாக வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. 

இதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெட்டுவாங்கேணி, நீலங்காரை, திருவான்மியூர், அடையார், சேப்பாக்கம், பாரிஸ் கார்னர், ராயபுரம், தண்டயார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், நெட்டுக்குப்பம் ஆகிய இடங்களில் குழாய் அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த மொத்தம் 466 கி.மீ நீளத்திற்கு குழாய் அமைக்கப்பட உள்ளது. இதில் 260 கி.மீ கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய பகுதிகளில் வருகிறது. இதன்படி 48 கோடி செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்த டோரண்ட் கேஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.