தேசிய வாக்காளர் தினம் - தினகரன் வாழ்த்து!!

 
ttv

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

election

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், புதிய வாக்காளர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையிலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

tn

ஒவ்வொரு தேர்தலிலும் ஜாதி, மதம், இனத்திற்காகவோ, பணம் மற்றும் பொருட்களுக்காகவோ அடிபணியாமல் விலை மதிப்பில்லா வாக்கினை நேர்மையுடன் செலுத்தி ஜனநாயக கடமையாற்ற நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். என்று குறிப்பிட்டுள்ளார்.