பத்திரிகையாளர்கள் என்றைக்கும் அறம் சார்ந்து பயணிக்க வேண்டும் - திருமாவளவன் வாழ்த்து

 
thiruma

நான்காவது தூணான பத்திரிகையாளர்கள் என்றைக்கும் அறம் சார்ந்து பயணிக்க வேண்டும் என்று திருமாவளவன் வாழ்த்தியுள்ளார்.

tnt

தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சனநாயகமும் பத்திரிகைத்துறையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற பல தலைவர்கள் தங்கள் புரட்சிகர கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல பத்திரிகைத்துறையை பயன்படுத்தியவர்கள். 


கடைசி மனிதனுக்கும் நடக்கும் அநீதியை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒளியாக பத்திரிகையும் ஊடகமும் இருக்க வேண்டும். சனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்கள் என்றைக்கும் அறம் சார்ந்து பயணிக்க வேண்டும் என்று தேசிய பத்திரிகையாளர் நாளில் வேண்டுகோள் விடுக்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.