தேசிய பத்திரிகையாளர் தினம் - ஓபிஎஸ், அண்ணாமலை வாழ்த்து!!

 
tn

தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி ஓபிஎஸ்,  அண்ணாமலை வாழ்த்து கூறியுள்ளனர்.

ttn

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், தேசிய பத்திரிகையாளர் தினமான இன்று, அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பாலமாக விளங்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும்  @BJP4Tamilnadu  சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காண உதவுவதும், தவறுகள் நடப்பின் எடுத்துரைப்பதும், அதிகாரத்துக்கு அஞ்சாமல், வளைந்து கொடுக்காமல், நேர்மைத் திறம்படச் செயல்படுவதுமான ஊடகங்களின் கடமைகளை சிறப்புடன் தொடர வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


அதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , ஜனநாயக நாட்டில் சுதந்திரமான மற்றும் பொறுப்புடைய பத்திரிகைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும், செய்தி ஊடகங்களை முறைப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட இந்திய பத்திரிகை கவுன்சில் அமைக்கப்பட்டத்தை நினைவுகூரும் விதமாகவும்  ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி தேசிய பத்திரிகைத் தினம் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. 


இந்த நன்னாளில், வெளிப்படைத் தன்மை, ஜனநாயகம், சமூக நீதி ஆகியவற்றை முன்னேற்றுவதில் இன்றியமையாப் பங்கு வகிக்கும் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.