மன்மோகன் சிங் மறைவு - அரசிக்கம்பத்தில் தேசிய கொடி!

 
flag

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது
 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மன் மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், இன்று நடக்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.