கள்ளச்சாராய மரணம் - தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

 
tt

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

கள்ளச்சாராயம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கருணாபுரம் கள்ளச்சாரய உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழக அரசால் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கருணாபுரம் பகுதிக்கு நேரடியாக சென்று மெத்தனால் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். விஷச் சாராய விவகாரத்தில் இதுவரை 12 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 60 பேர் உயிரிழந்தனர். 

tt
இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  தலைமைச்செயலாளர் டிஜிபி மற்றும் தமிழ்நாடு அரசு ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு  பிறப்பித்துள்ளார்.