பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம் - தினகரன்

 
TTV

தேசிய பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை தினகரன் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், எதிர்கால சமுதாயத்தின் சிற்பிகளான பெண் குழந்தைகள் அனைவருக்கும் மனமார்ந்த தேசிய பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

tn

பெண் குழந்தைகளுக்கான கல்வி, பாதுகாப்பு, சம உரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, அவர்களுக்கு எதிரான குற்றங்களை களைந்து பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.