பணிப்பெண் விவகாரம் - தேசிய மகளிர் உரிமை ஆணையம் கண்டனம்

 
tn

திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பணிப்பெண் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில் தேசிய மகளிர் உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

tn

சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண்  அவரது  மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் எம்எல்ஏவின் மகன் ஆண்டோ, அவருடைய மனைவி மெர்லினா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நீலாங்கரை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

tn

இந்நிலையில் பல்லாவரம் திமுக எம்எல்ஏ-வின் மகன் வீட்டில் பணிப்பெண் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 நாட்களில் அறிக்கை அளிக்க தேசிய மகளிர் உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐபிசி பிரிவு 323 மற்றும் 354 பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யுமாறும், விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் தேசிய மகளிர் உரிமை ஆணையம் காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.