எடப்பாடி பழனிசாமி அதிமுகவை சிறிது சிறிதாக அழித்து வருகிறார்- நத்தம் விஸ்வநாதன்

 
“கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதையாக அதிமுக நிலை ஆகிவிட்டது”- நத்தம் விஸ்வநாதன்

எடப்பாடி பழனிசாமி  அதிமுகவை சிறிது சிறிதாக அழித்து வருவதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன் பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன், “அ.தி.மு.க.வை சிறிது சிறிதாக அழித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.அ.தி.மு.க.வை பலப்படுத்தும் விதமாக தான் கட்சியில் இருந்து வெளியில் சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஒரு அம்பு தான் அம்பை எய்தவர் எடப்பாடி பழனிசாமி தான். 1996 தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றவர் ஜெயலலிதா. தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க மறுக்கிறார். பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பை தட்டி கழிக்கின்றார் எடப்பாடி பழனிசாமி” என்றார்.