“பழக்கதோசத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஒரு நாள் தன்னை தானே நீக்கி கொள்வார்”- நத்தம் விஸ்வநாதன்

 
ச்

கட்சி ரீதியாகவும், எம்.எல்.ஏக்கள் அடிப்படையிலும் எங்களை நீக்கும் அதிகாரம் இபிஎஸ்-க்கு இல்லை என நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.


எடப்பாடி பழனிசாமிக்கு நீக்கி மட்டுமே பழக்கம் உள்ளது. கட்சி தலைமை பொறுப்பை ஏற்றது முதல் இபிஎஸ் நிர்வாகிகளை நீக்கிக்கொண்டே இருக்கிறார். எல்லாரையும் கட்சியை விட்டு நீக்குவதையே வேலையாக வைத்துள்ளார்... போற போக்க பாத்தா பழக்க தோஷத்தில் தன்னை தானே இ.பி.எஸ் நீக்கிக்கொள்வார். இவரால் நீக்கப்பட்ட பல பேர் இன்று வெவ்வேறு கட்சிகளில் எம்.எல்.ஏக்களாக உள்ளனர்.சட்டமன்ற அமைப்பு என்பது தனி, கட்சி அமைப்பு என்பது தனி. கட்சி ரீதியாகவும், எம்.எல்.ஏக்கள் அடிப்படையிலும் எங்களை நீக்கும் அதிகாரம் இபிஎஸ்-க்கு இல்லை. இபிஎஸ் எடுக்கக்கூடிய எந்த நடவடிக்கையும் எங்களுக்கு பொருந்தாது. யாரையும் நீக்க சட்டத்தில் இடமில்லை” என்றார்.