“கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதையாக அதிமுக நிலை ஆகிவிட்டது”- நத்தம் விஸ்வநாதன்
Aug 3, 2026, 19:31 IST1785765689130
அதிமுக நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய நத்தம் விஸ்வநாதன், “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி கைக்கு கட்சி வந்தபோது 134 எம்.எல்.ஏக்கள், 50 எம்பிக்கள் இருந்தனர். ஆனால் கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதையாக அதிமுக நிலை ஆகிவிட்டது. இந்தியாவில் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியாக அதிமுக இருந்தது. எம்.எல்.ஏ 65 ஆச்சு, 47,41 ஆக குறைந்துவிட்டது. 50 எம்பிக்கள் எண்ணிக்கை சீரோவாக மாறிவிட்டது. எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் அதிமுக வளர்ச்சியா? அல்லது தளர்ச்சியா? என்பதை பார்க்க வேண்டும். அதிமுகவை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல பல ஆலோசனைகளை வழங்கினோம். ஆனால் அவர் அதனை கேட்கவில்லை. அடுத்த தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது” என்றார்.

