டிச.27-ல் நாதக பொதுக்குழு கூட்டம் - சீமான்..!
Dec 15, 2025, 16:50 IST1765797620315
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 27-12-2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) அரங்கில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இப்பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பு கிடைக்கப்பெறும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


