கலைஞர் தமிழ் மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர்- பிரதமர் மோடி
Jun 3, 2024, 15:31 IST1717408903758
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 101 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கலைஞரின் 101வது பிறந்த நாளை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கலைஞர் கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்தநாளில் நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தனது நீண்ட காலப் பொது வாழ்க்கையில் தமிழ் மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் அவர் பாடுபட்டார். தனது அறிவார்ந்த இயல்புக்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். தத்தமது மாநிலங்களில் நாங்கள் இருவரும் முதல்வர்களாக இருந்தது உள்ளிட்ட, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருடனான என்னுடைய பரிமாற்றங்களை நான் வாஞ்சையோடு நினைவுகூர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


