"பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை" - பிரதமர் மோடி

 
pm modi

ஐந்து தசாப்தங்களாக ஆட்சி செய்தாலும் பழங்குடியினர் நலனில் அக்கறை காட்டாத பழைய கட்சி காங்கிரஸ் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

மத்தியப் பிரதேசத்தின் சியோனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி.(ANI)

மத்திய பிரதேசம் சியோனியில் நடைபெற்ற தேர்தல் பரபரப்புரையின் போது பேசிய பிரதமர் மோடி, “பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை, 2014 ஆம்  ஆண்டுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு ஊழலும் பல லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. காங்கிரஸ் வளர்ச்சிப் பணிகளைச் செய்யாமல் ஏழைகளின் பாக்கெட்டுகளை காலி செய்தது. ஏழைகளின் உரிமைகளுக்காக சேமித்த பணம் தற்போது ரேசன் பொருட்களுக்காக செலவிடப்படுகிறது. நானும் வறும்யை அனுபவித்து இருந்ததால் ஏழைகளின் வலியை என்னால் உணரமுடியும். ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்க உத்தரவாதம் அளிக்கப்படும்.

காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய சிங் மற்றும் கமல்நாத் ஆகியோர் மத்திய பிரதேசத்தில் தங்கள் மகன்களுக்காக கட்சியை கைப்பற்ற போராடுகிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் கட்சி அமைப்பை யாருடைய மகன் கைப்பற்றுவது என்பதில் காங்கிரஸின் இரண்டு பெரிய தலைவர்கள் சண்டையிடுகிறார்கள். ஐந்து தசாப்தங்களாக ஆட்சி செய்தாலும் பழங்குடியினர் நலனில் அக்கறை காட்டாத பழைய கட்சி. ஏழைகளின் உரிமைகளுக்காக நாம் சேமித்த பணம் இப்போது ஏழைகளின் ரேஷனுக்குச் செலவிடப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைப்பதற்கான வலுவான சாத்தியக்கூறுகள் உள்ளன” என்றார். 

மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.