போதைப் பொருள் கடத்தல் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் கைது!

 
jayakumar

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் கைதாகியுள்ளார்.

drugs

தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தால் குற்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. 

tn

இந்நிலையில் சென்னையில் மெத்தாம்பிட்டமைன்  போதைப் பொருளைப் பதுக்கி வைத்திருந்த ராகுல், காதர் மைதீன் ஆகியோர் கைதாகியுள்ளனர். போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான ராகுல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.