கர்நாடகாவில் டிடிஎஃப் வாசனை கொல்ல வந்த போதை ஆசாமி!
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் ஆற்றில் குளித்த போது டிடிஎஃப் வாசனை கொல்ல வந்த போதை ஆசாமியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் விலையுயர்ந்த பைக்குகளில் சாகசங்கள் செய்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்து வந்தார். இவருக்கு தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளில் சர்ச்சைகளில் சிக்கிவரும் டிடிஎஃப் வாசன், அண்மை காலமாக தன்னை சிலர் கொலை செய்ய முயன்றதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் கர்நாடகா, குடகு மாவட்டத்தில் ஆற்றில் குளித்த போது யூடியூபர் டிடிஎப் வாசனை போதை ஆசாமி மிரட்டியதாகவும், இங்க குளிச்சா குத்துவேன் என்றும் பேசிய வீடியோவை வாசன் யூடியூபில் பகிர்ந்துள்ளார். தன்னை கொலை செய்ய முயன்றவர்கள் குறித்த வீடியோவை, தனது யூடியூப் சேனலில் பதிவிடப்போவதாக ஏற்கனவே டிடிஎஃப் வாசன் அறிவித்துருந்தது குறிப்பிடதக்கது.