"என் இல்லமே குறிவைக்கப்பட்டுள்ளது"- காங்கிரஸிலிருந்து வெளியேறிய அமெரிக்கை வி நாராயணன் பரபரப்பு
காங்கிரஸிலிருந்து வெளியேறிய அமெரிக்கை வி நாராயணனின் எக்ஸ் தள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் 37 ஆண்டுகளாக இணைந்து பொதுச்சேவையில் ஈடுபட்டு வந்த அமெரிக்கை வி நாராயணன், கடந்த வாரம் கட்சியிலிருந்து விலகினார். 1988ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று, 1986ஆம் ஆண்டு திரு ராஜீவ் காந்தியுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர், திரு ஜி. கே. மூப்பனார் முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணைந்தார். தமிழ் தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில், பங்கேற்று கருத்து தெரிவித்து வந்த அமெரிக்கை நாராயணன் கட்சியிலிருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
என் அனுமதி இல்லாமல், வேளச்சேரியில் உள்ள என் இல்லம் அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
— Americai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன் (@americai) April 13, 2026
என் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. நுழைவாயிலில் குப்பை வீசப்பட்டுள்ளது.
37 ஆண்டுகள் @INCIndia-வில் இருந்து விலகி, @INCTamilNadu செயல்பாட்டுக்கு நான் திறந்தவெளியில்… pic.twitter.com/rfl72rtQXV
இந்நிலையில் அமெரிக்கை வி நாராயணன் தனது எக்ஸ் தளத்தில், “என் அனுமதி இல்லாமல், வேளச்சேரியில் உள்ள என் இல்லம் அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. என் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. நுழைவாயிலில் குப்பை வீசப்பட்டுள்ளது.37 ஆண்டுகள் காங்கிரல் இருந்து விலகி, காங்கிரஸின் செயல்பாட்டுக்கு நான் திறந்தவெளியில் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், குறிப்பாக என் இல்லமே குறிவைக்கப்பட்டுள்ளது. இது தவறு அல்ல. திட்டமிட்ட செயல். தேர்தல் விதிமுறைகளின் வெளிப்படையான மீறல். உடனடியாக அகற்றவும். மன்னிப்பு வழங்கவும். நடவடிக்கை எடுக்கவும்” என தேர்தல் ஆணையத்தை குறிப்பிட்டு கேட்டுக்கொண்டுள்ளார்.



