உடனடியாக செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் - நாராயனண் திருப்பதி

 
narayanan stalin narayanan stalin

உடனடியாக செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்ன நடக்கிறது தமிழகத்தில்? நாங்கள் பிணை அளித்த மறுநாளே நீங்கள் சென்று அமைச்சராகி விட்டீர்கள். அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருப்பதால் சாட்சிகள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாவார்கள் என்று யாராக இருந்தாலும் எண்ணுவார்கள்" என்று உச்சநீதி மன்றம் செந்தில் பாலாஜிக்கு பிணை அளித்த திரும்ப பெறுமாறு கோரிய வழக்கில் கேட்டிருப்பது தமிழக முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டியிருக்கும் என நம்புகிறேன். 

உச்சநீதிமன்றத்தின் இந்த கேள்விகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு பொறுப்பான முதலமைச்சருக்கு அழகு. அதனடிப்படையில் உடனடியாக செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி, தான் பொறுப்பான முதலமைச்சர் என்பதோடு உச்சநீதி மன்றத்தை மதிப்பவர் என்று நிரூபிப்பாரா மு. க .ஸ்டாலின் அவர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.