சின்னப்பிள்ளைக்கு வீடு வழங்கப்படாததற்கு திமுக அரசு தான் காரணம் - நாராயணன் திருப்பதி

 
narayanan stalin

பத்ம ஸ்ரீ சின்னப்பிள்ளை அவர்களின் கவலைக்கு காரணம் திமுக அரசு தான் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார். 

பத்மஸ்ரீ சின்ன பிள்ளை அவர்கள் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தனக்கு உறுதியளிக்கப்பட்ட வீடு இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் பேசிய காணொளியைக் கண்டேன். கவலை வேண்டாம், ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனையுடன் கூடுதலாக 380 சதுர அடி நிலத்துக்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும், கலைஞரின்_கனவு_இல்லம் திட்டத்தின்கீழ் அவருக்குப் புதிய வீடும் வழங்கப்படும். இந்த மாதமே கட்டுமானப் பணிகள் தொடங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். 

narayanan thirupathi

இந்த நிலையில், பத்ம ஸ்ரீ சின்னப்பிள்ளை அவர்களின் கவலைக்கு காரணம் திமுக அரசு தான் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுவதுவது மாநில அரசு தான். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதும் மாநில அரசு தான். அதன்படி பத்ம ஸ்ரீ சின்னப்பிள்ளை அவர்களின் கவலைக்கு காரணம் உங்கள் அரசு தான் முதல்வர் அவர்களே! அவரின் வேதனைக்கு காரணம் உங்கள் அரசின் சோதனை தான் என்பதை உணருங்கள். இப்போதைய உங்கள் அறிவிப்பையாவது முறையாக செயல்படுத்த முனையுங்கள். தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? என கேள்வி எழுப்பியுள்ளார்.