பாஜகவினரை கொலை செய்வோம் என பேசிய ஆர்.எஸ்.பாரதியை கைது பண்ணுங்க!

 
narayanan stalin

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் கெடுக்க ஆளும் திமுகவே முயற்சி செய்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

narayanan thirupathi

அண்ணாமலைக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது என்று பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாராயணன் திருப்பதி தனது டிவிட்டர் பக்கத்தில், “பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார் தி மு கவின் அமைப்பு செயலர் ஆர்எஸ் பாரதி தூத்துக்குடியில் பேசியிருக்கிறார். சட்ட மன்றத்தில் கொலை நடந்தாலும் வழக்கு தொடுக்க முடியாது என்று ஆளுநரை கொலை செய்வோம் என்று மிரட்டியதற்கு குறித்து மௌனம் காத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது பாஜகவினரை கொலை செய்வோம் என்று மிரட்டியுள்ள ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய உத்தரவிட வேண்டும். 

ஆளும் கட்சி என்ற ஆணவத்தில், திமிரில் இது போன்று வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் முயற்சியில் ஆர்.எஸ். பாரதி பேசிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதோடு, இதே போன்று கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதை முதலமைச்சர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது, அரசு நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த முடியாத காரணத்தினால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் கெடுக்க ஆளும் திமுகவே முயற்சி செய்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.