“பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற விஜய்க்கு வாழ்த்துகள்”- ஆந்திர அமைச்சர்
தமிழகத் தேர்தலில் களம் கண்ட தங்களது சிறப்பான முதல் வெற்றிக்காக விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என ஆந்திர பிரதேச அமைச்சர் நர லோகேஷ் கூறியுள்ளார்.
Congratulations to @TVKVijayHQ on an astounding electoral debut in Tamil Nadu. The outcome reflects the evolving aspirations of the state’s electorate and adds a new dimension to its political landscape. Wishing him the very best as he steps into public life and works towards…
— Lokesh Nara (@naralokesh) May 4, 2026
இதுதொடர்பாக நர லோகேஷ் தனது எக்ஸ் தளத்தில், “வாழ்த்துகள் விஜய்... தமிழகத்தில் தனது முதல் தேர்தல் முயற்சியிலேயே வியக்கத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இந்தத் தேர்தல் முடிவு, மாநில வாக்காளர்களின் மாறிவரும் எதிர்ப்பார்ப்புகளைப் பிரதிபலிப்பதோடு, அதன் அரசியல் களத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தையும் சேர்க்கிறது. விஜய் பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து, மக்களின் எதிர்பார்ப்புகளைப் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றப் பாடுபடும் இவ்வேளையில், அவருக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

