"திருநங்கை சாபம் பழித்துவிட்டது; மனைவியை பிரிந்துவிட்டேன்"- நாஞ்சில் விஜயன் உருக்கம்

 
ச்

நாஞ்சில் விஜயன் தனது மனைவியைப் பிரிந்து தனிமையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரபரப்பான பதிவு ஒன்றை வெளியிட்டு, பின்னர் அதை நீக்கியதாக கூறப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நாஞ்சில் விஜயன். பின் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இதற்கென்றே நாஞ்சில் விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. இந்நிலையில் விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன் பலமுறை ரிசார்ட்டிற்கு அழைத்து சென்று பழகிவிட்டு ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கை வைஷூ என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் திருநங்கை சகோதரி வைஷ்ணவியுடனான பிரச்சனை மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை குறித்து  சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ள நாஞ்சில் விஜயன், "வீட்டில் ஏற்பட்ட சண்டையில் என் மாமியார், 'நீ ஒரு திருநங்கை, ஏமாற்றிதானே என் பொண்ணைக் கல்யாணம் பண்ணினாய்' என்று கூறிவிட்டார்கள். இப்போது என் மனைவியை பிரிந்து தனிமையில் வந்துவிட்டேன். திருநங்கையின் சாபம் உன்னைச் சும்மா விடாது என சிலர் கமெண்ட் செய்தார்கள், அது இன்று பழித்துவிட்டது. நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள், நான் தோற்றுவிட்டேன்" என மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.