"நாடு முழுவதும் பரப்புரை செய்ய விஜய் எனக்கு அனுமதி கொடுத்துள்ளார்”- நாஞ்சில் சம்பத்
விஜய் என்னைப் பார்த்து, ‘நான் உங்கள் ரசிகன்’ என்று கூறினார். நான் மெய்சிலிர்த்துப் போனேன் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

த.வெ.கவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “திமுக என்னை திட்டமிட்டு நிராகரித்தது. விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தேன், என்னை கண்டதும் `நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன்' என விஜய் கூறினார். நான் மெய் சிலிர்த்து போனேன். தம்பி விஜய் என்னுடைய திசையை தீர்மானித்திருக்கிறார். விஜய் சரியான பாதையில் பயணிக்கிறார் என தந்தி டிவியில் பேசிய பிறகு என் மீது வசைப்பாடுகள் அதிகமாகின. தவெகவில் இணைந்து விஜய்யை சந்தித்த தருணத்திலிருந்து புதிதாக பிறந்தது போல உணருகிறேன். நாடு முழுவதும் பரப்புரை செய்ய விஜய் எனக்கு அனுமதி கொடுத்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் விஜய் அமைதி காப்பது ஒருவகையில் நல்லதுதான். மல்லை சத்யாவின் புதிய கட்சியில் இருந்து வந்த அழைப்பை தனிப்பட்ட காரணத்திற்காக நிராகரித்து விட்டேன்” என்றார்.


