2 நாளில் அண்ணாமலையின் பதவி பறிபோகும்- நாஞ்சில் சம்பத் அதிரடி

 
Nanjil

பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்க வாய்ப்பில்லை என திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜகவில் இருந்து  ஐடி விங்க் தலைவர் ,செயலாளர் மற்றும் நிர்வாகிகள் என்று கூண்டோடு வெளியேறி அதிமுகவில் இணைந்துள்ளனர்.  இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற அண்ணாமலை  எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக  தாக்கி பேசி வருகிறார்.   அண்ணாமலையின் ஆதரவாளர்களும் அதிமுகவையும் எடப்பாடி பழனிச்சாமியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.  

ஆனால் அண்ணாமலையோ, “ நான் சிலர் கட்சியில் மேனேஜராக இருப்பேன் என்று நினைக்கிறார்கள்.  நான் அப்படி மேனேஜராக இருக்க விரும்பவில்லை.  நான் தலைவன்.  நான் இப்படித்தான் இருப்பேன்.  விருப்பமுள்ளவர்கள் இருக்கலாம் . விருப்பம் இல்லாதவர்கள் போய்க் கொண்டே இருக்கலாம் . அதை பற்றி எனக்கு ஒன்றும் இல்லை” எனக் கூறிவருகிறார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற அவரை ஏற்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராக இல்லை. 2 நாட்களில் பாஜக தலைவராக அவர் நீடிக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அதிமுகவுடனான கூட்டணியை டெல்லி விரும்புகிறது. அண்ணாமலை அடாவடி தனமாக பேசிவருகிறார். அவர் அழிவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். அதைதான் அவருடைய பேச்சு உணர்த்துகிறது, எந்த தலைவரும் என்னை தலைவர் என்று சொல்லிக் கொள்வதில்லை. அவரை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கருத்து பாஜகவிற்குள்ளேயே எழுந்துள்ளது.” எனக் கூறினார்.