”பிக்பாஸை தடை பண்ணனும்.. தனிப்பட்ட முறையில தாக்குறாங்க”- நந்தினி பரபரப்பு பேட்டி
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 4 நாட்களில் வெளியேறிய நந்தினி பேட்டியளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நந்தினி கூறுகையில், “பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ இல்லை. Content-காக சாப்பாடு கூட சரியா தரமாட்டாங்க. முதல்ல ஒழுங்கா சோறு போடுங்க! சாப்பாடு போடாம Stress-ல வச்சி கேம் பிளே பண்றாங்க. Content-காக சாப்பாட்டுல உப்பு போட்டு சண்ட போட வச்சு போட்டியாளர்களை தப்பா காட்டுறது எல்லாம் ஒரு விளையாட்டா? விஜய் சேதுபதி போட்டியாளரை ஒரு போட்டியாளராகவே பார்ப்பதில்லை. ஒரு விசயத்தை சொல்ல வரும்போது அவமதிப்பு செய்கிறார். கமல்ஹாசன் இருந்த வரைக்கும் நல்லப்படியாக இருந்தது. விஜய் சேதுபதி வந்த பிறகு நல்ல முறையாக இல்லை. பிக்பாஸை தடை பண்ணனும்.. தனிப்பட்ட முறையில தாக்குறாங்க.பிக்பாஸ் நிகழ்ச்சியில் மனித உரிமை மீறல் நடக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடவுள்ளேன்.” என்றார்.


