“மைசூர் சிங்கம் அண்ணாமலை வந்ததில் இருந்து பாஜக வளர்ந்துட்டு இருக்கு” - நடிகை நமிதா

 
நமீதா அண்ணாமலை

கர்நாடகா தேர்தல் தோல்வி பிரச்சனை இல்லை, இன்று இல்லையென்றால் நாளை வெற்றி பெறுவோம் என நடிகை நமிதா தெரிவித்துள்ளார். 

அண்ணாமலையை ஆதரித்து பேசிய நடிகை நமீதா....! அதிருப்தி அடைந்த தொண்டர்கள்...!  - தமிழ் News - IndiaGlitz.com

கோவை தெற்கு பாஜக சார்பில் “பாஜக குடும்ப பிரிமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டு போட்டி” மதுக்கரை பகுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியை நடிகையும், பாஜக பிரமுகருமான நமிதா கிரிக்கெட் விளையாடி துவக்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். இன்று எனது முதல் அன்னையர் தினம், அதனால் இந்த நிகழ்ச்சியை முடிந்தவுடன் உடனடியாக சென்னை கிளம்பி வீட்டிற்கு செல்ல உள்ளேன். பாஜக மட்டும் தான் கட்சி உறுப்பினர்களை ஒருங்கிணைக்க இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மைசூர் சிங்கம் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றது முதல் பாஜக கட்சி நன்கு முன்னேறி வருகிறது. மேலும் அதன் காரணமாக தான் எங்கு சென்றாலும் பாஜக பெயர் ஒலிக்கிறது. பாஜக தலைவர் அண்ணாமலையின் கவனம் தமிழகத்தின் மீது இருக்கலாம், அவர் தனது பணியை சிறப்பாக செய்வார். என் தலைவரைப் பற்றி தவறாக பேசக்கூடாது. 

கர்நாடகா தோல்வி பெரிய பிரச்சனை இல்லை, அடுத்த முறை வெற்றி பெறலாம். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாரத பிரதமர் மோடி ஆகியோர் மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. எனவே இன்று வெற்றிபெறவில்லை  என்றால் நாளை வெற்றி பெற்று விடலாம்” என்றார்.