சென்னையில் இந்தியில் பெயர்ப்பலகை

 
சென்னையில் இந்தியில் பெயர்ப்பலகை

சென்னை கோயம்பேடு மெட்ரோ அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்தியில் வழிகாட்டிப் பலகை அமைப்பு. தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சுமார் 30 கி.மீ. இணைப்புச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதில் வைக்கப்பட்டுள்ள மாநில நெடுஞ்சாலைத் துறைப் பெயர் பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து, ஹிந்தியில் எழுதுவதற்கு காரணமான அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மெட்ரோ அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்தியில் வழிகாட்டிப் பலகை அமைப்பு. தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தி பெயர்ப்பலகை விவகாரத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். ஏற்கனவே தூத்துக்குடியில் இந்தியில் பெயர்ப் பலகை வைத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்த நிலையில், கோயம்பேடு பகுதியில் இந்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டது தொடர்பாக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.