நாமக்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் உயிரிழப்பு..!

 
1

நாமக்கல்லில் உள்ள ஒரு உணவகத்தில் சண்முகநாதன் என்பவரது மகன் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி சென்றுள்ளார். மகன் வாங்கி கொடுத்த சிக்கன் ரைஸை ஆசையாக சாப்பிட்ட தந்தை சண்முகநாதன் மற்றும் நதியா என்பவர் சாப்பிட்டுள்ளார். 


இதையயடுத்து சிறது நேரத்தில் அவர்களுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போக உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர் .

தீவிர சிகிச்சை பிரிவில் இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சண்முகநாதன்(72) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .


உணவகத்தில் மகன் பார்சல் வாங்கி வந்த சிக்கன் சாப்பிட முதியவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியில் நிலையில் அந்த சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்தது தடயவியல் சோதனையில் அம்பலமாகி உள்ளது.

இதையடுத்து சண்முகநாதனின் மகன் மற்றும் சிக்கன் ரைஸ் கடைக்காரரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.