#BREAKING ஈரான் போர் எதிரொலி- முட்டை விலை அதிரடி குறைவு

 
கோழி பண்ணையாளர்களுக்கு ரூ.560 கோடி வருவாய் இழப்பு.. ரேஷன் கடைகளில் முட்டை விற்பனையா?!

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை இன்று 30 காசுகள் குறைந்து ரூ.4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்ததில், சுமார் 1,100 க்கு மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 10 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாள்தோறும் சுமார் 70 லட்சம் முட்டைகள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் நாமக்கல் பகுதியில் இருந்து மட்டுமே முட்டை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் போன்ற ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஒரு சில ஆப்ரிக்க நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஈரான் போர் காரணமாக இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தற்போது முற்றிலும் தடைப்பட்டுள்ளது.


இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்  கூறுகையில், நாமக்கல் லில் இருந்து வளைகுடா நாடுகளான ஈரான் ஈராக் துபாய் கத்தார் ஓமன் பஹ்ரைன் சார்ஜா ஆகிய நாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி ஆகி வந்தது. ஈரான் போர் பதட்டம் காரணமாக இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் தடைப்பட்டுள்ளது. எந்த கப்பலும் செல்லவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் நாமக்கல் லில் இருந்து 77 கண்டெய்னர் ல் கப்பலில் அனுப்பப்பட்ட 3.50 கோடி முட்டைகள் நடு கடலில் தத்தளித்து வருகிறது. இதனால் ஏற்றுமதியாளர் செய்வதறியாது உள்ளனர்.