ஜெ.சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த நல்லமநாயுடு காலமானார்!!

 
nallama

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம நாயுடு காலமானார். அவருக்கு வயது 85

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஊழல் வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லமநாயுடு. தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வந்த இவர் எஸ்.பி., வரை பதவி உயர்வு பெற்றவர்.   1996 ஆம் ஆண்டில் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சென்னை மத்திய சிறையில் இருந்தபோது அவரை நேரடியாக சென்று விசாரித்தார் நல்லம நாயுடு. இதையடுத்து இவர் பல வழக்குகளில் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி தீர்வு கண்டுள்ளார்.

ttn

2001 இல் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஜெயலலிதா கையால் விருது வாங்கும்  சூழல் நல்லம நாயுடுக்கு  ஏற்பட்டபோது, வரை விருதை வாங்க விடாமல், அவர் வீட்டிற்கே விருதை அனுப்பி வைத்துள்ளது அன்றைய அதிமுக அரசு. 2014 ஆம் ஆண்டில் பெங்களூரு தனி நீதிமன்றம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவித்து தீர்ப்பு வழங்கியது. இதில்  பெரும்பான்மையான பங்கு நல்லம நாயுடுவுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது .

tt

இந்நிலையில் தனது பணி ஓய்வுக்கு பிறகு, கடைசி காலத்தை சென்னை பெரியார் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் நேற்றிரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம நாயுடு மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.