தகைசால் தமிழர் நல்லகண்ணு பிறந்தநாள் - அண்ணாமலை, ஜி.கே.வாசன் வாழ்த்து!!

 
Nallakannu Nallakannu

தகைசால் தமிழர் நல்லகண்ணுவின் பிறந்தநாளையொட்டி அண்ணாமலை, ஜி.கே.வாசன் வாழ்த்து கூறியுள்ளார். 

tn

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எளிமையான மனிதர். சிறந்த எழுத்தாளர். சமூக சீர்திருத்தவாதி. தாமிரபரணி நதியில் மணல் எடுப்பதைத் தடை செய்ய, தன்னலமின்றிப் போராடி வெற்றி கண்டவர். 

ஐயா நல்லக்கண்ணு அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட காலம் மக்கள் பணி தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்என்று குறிப்பிட்டுள்ளார். 



அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் , ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு 98 ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருப்பவர்.  தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர, தமிழ்நாடு முன்னேற அயராது பாடுபடுபவர். பொது வாழ்க்கையில் நேர்மை, எளிமையைப் பின்பற்றுபவர். ஐயா #நல்லக்கண்ணு அவர்கள் நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன்.என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.