#BREAKING தாம்பரம் காவல் ஆணையராக நஜ்மல் ஹோடா நியமனம்
சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ், தாம்பரம் காவல் ஆணையராக கூடுதலாக பொறுப்பு வகித்த நிலையில் தற்போது நஜ்மல் ஹோடா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, தாம்பரம் காவல் ஆணையராக (Commissioner of Police, Tambaram) நஜ்முல் ஹோடா, ஐபிஎஸ், ADGP, Operations, Chennai அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் கமிஷனரேட்டில் ஏற்கனவே காலியாக இருந்த இடத்தில் இவர் உடனடியாக பொறுப்பேற்கிறார். அவரது இடத்திற்கு, ஆயுதப்படை ADGP R.தினகரன், IPS அவர்கள், ADGP Operations பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
யார் இந்த நஜ்முல் ஹோடா? அவரது பின்னணி என்ன?
2001-ம் ஆண்டு பேட்ச் IPS அதிகாரி, தமிழ்நாடு கேடர். மத்திய அரசின் DoPT-யால் 2026-ல் Joint Secretary-க்கு Empanel செய்யப்பட்டவர்.
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) வரலாற்றில் பட்டப்படிப்பு, டெல்லி JNU-வில் Modern History-ல் முதுகலை பட்டம். முதலில் 2000-ல் IRTS-ல் தேர்வாகி பிறகு 2001-ல் IPS ஆனவர்.
தொடக்கத்தில் தூத்துக்குடி, மதுரை, தேனி, தருமபுரி, அரியலூர், விருதுநகர் என 6 மாவட்டங்களில் கடும் சட்டம்-ஒழுங்கு பணியில் இருந்தவர்.
வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக இருந்தபோது, ரவுடிகளுக்கு எமனாக இருந்தார். 500-க்கும் மேற்பட்ட ரவுடிகளை குண்டர் சட்டத்தில் அடைத்தவர் என்ற பெயர் இவருக்கு உண்டு.

