#BREAKING தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

 
ச் ச்

மதிமுக, அதிமுக, திமுக என பல்வேறு கட்சிகளில் பயணித்த நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

ச்


கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை எனும் ஊரில் மளிகைக் கடை வைத்திருந்த இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த பாஸ்கரன் - கோமதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், மதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடனான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.பின்னர் 2016 ஜனவரி 2ஆம் தேதி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மதிமுக வைகோவுடன்19 ஆண்டுகள் வலம் வந்த நாஞ்சில் சம்பத், அதன்பின் அதிமுகவில் சேர்ந்து ஜெயலலிதாவிடம் பிரசாரத்துக்காகவே இன்னோவா கார் வாங்கிய போது ‘இன்னோவா சம்பத் ‘ என அழைக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பின் திமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத், தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.