“சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது! உடனே தலையிடுங்க”- அமித்ஷாவுக்கு நயினார் நாகேந்திரன் அவசர கடிதம்
திருத்தணியில் வட மாநில இளைஞர் தாக்கப்பட்டது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.

திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் வடமாநில இளைஞரை 4 சிறுவர்கள் கஞ்சா போதையில் சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதட்டமும் விலகுவதற்கு முன்பாகவே, அதே தொடர்வண்டி நிலையத்தில் ஜமால் என்ற புடவை வணிகர் போதையில் இருந்த 4 இளைஞர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். ஒரே தொடர்வண்டி நிலையத்தால் அடுத்தடுத்து போதைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதும், அத்தாக்குதல்களைத் தடுப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றனர்.
The people of Tamil Nadu are in grave distress due to the complete breakdown of the law and order situation in the state.
— Nainar Nagenthran (@NainarBJP) December 31, 2025
I have written to our Hon’ble Home Minister, Thiru @AmitShah avl, apprising him of the situation. pic.twitter.com/68TNXvZaGH
இந்நிலையில் திருத்தணியில் வட மாநில இளைஞர் தாக்கப்பட்டது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்துள்ளது. சட்டம், ஒழுங்கு விவகாரத்தில் மத்திய உள்துறை நேரடியாக தலையிட வேண்டும். சமீபகாலமாக தொடர் வன்முறைகள், கொடூர சம்பவங்கள் பதிவாகி வருவது கவலையளிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


