திடீர் திருப்பம்- பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்? தேர்தல் விதிமுறைகள் தளர்வு

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரனுக்கு அதிக வாய்ப்பு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட கட்சியில் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இருவரும் பாஜகவில் உறுப்பினராகி 10 ஆண்டுகள் நிறைவடையவில்லை. அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து 8 ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில், நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல் எழுந்தது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரனுக்கு அதிக வாய்ப்பு என தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம் நயினார் நாகேந்திரனுக்காக தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து நாளை நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்கிறார். சட்டமன்ற குழு தலைவர் பதவி மற்றும் கட்சியில் 8 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் நயினார் நாகேந்திரன் தலைவராக வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.