₹4 கோடி பறிமுதல் வழக்கு - நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்!

 
tn

தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியரிடம் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நயினாருக்காக பணம் கொண்டு செல்வதாக சதீஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தது. 

மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் ஆஜராக போலீசார்  சம்மன் அனுப்பியுள்ளனர். 

yn

மேலும் தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், தொழில் பிரிவு துணைதலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 4 பேர் நாளை மறுநாள் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.