"நாளைக்கு தேர்தல் வைத்தாலும் நாங்க தயார்"- நயினார் நாகேந்திரன்

 
nainar nainar

தமிழகத்தில் நாளையே சட்டமன்ற தேர்தல் நடைபெற்றாலும் நாங்கள் தயார், தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் வருகிற 23-ந் தேதி தமிழகம் வர உள்ளார் என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழக பாஜக மையக்குழு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதன்பிறகு, பா‌.ஜ.க‌. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்  செய்தியாளர்களை சந்திக்கையில், “தமிழகத்தில் நாளையே சட்டமன்ற தேர்தல் நடைபெற்றாலும் நாங்கள் தயாராக உள்ளோம். மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை தான் பார்க்க வேண்டும். தி.மு‌‌.க.வின் 5 ஆண்டுகால ஆட்சியில் சொத்துவரி உள்ளிட்டவைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுகிறது. மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டும் தமிழகத்தில் தெரிவிக்கப்படவில்லை.

10 வயது சிறுமி முதல் 70 வயது முதியவர்கள் வரை யாரும் சாலையில் நடமாட முடியவில்லை. தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தில் 41 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். இதையெல்லாம் வைத்துவிட்டு மக்கள் எப்படி அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவார்கள் என்பதை தெரிவிக்கிறீர்கள். தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார் அவர் வருகிற 23-ஆம் தேதி தமிழக வருவதாக உள்ளது. வரும்போது நாங்கள் நிச்சயமாக தெரிவிப்போம். ஜனவரி 9-ம் தேதி எனது யாத்திரை நிறைவடைகிறது. பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சர் நிறைவு விழாவில் கலந்து கொள்வார்” என தெரிவித்தார்.