“மிரட்டி கூட்டணி சேர்க்கவில்லை”- நயினார் நாகேந்திரன்

 
நீட் தேர்வால் பா.ஜ.க-வுக்கு பாதிப்பு இல்லை! – நயினார் நாகேந்திரன் சொல்கிறார்

அமைச்சர் பொன்முடியை கண்டால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

வருத்தத்தை போக்குவதாக இருந்தால் பொதுச் செயலாளர் பதவி கொடுத்திருக்க வேண்டும்! – நயினார் நாகேந்திரன் அதிருப்தி

கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “அமலாக்கத்துறை தனி அமைப்பு, தவறாக பணப்பரிமாற்றம் செய்பவர்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும். அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி அதிமுகவை கூட்டணியில் சேர்த்ததாக கூறுவது தவறு. திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம். அண்ணாமலையை யாராலும் பாஜகவில் இருந்து வெளியேற்ற முடியாது. அவர் எங்கள் சொத்து. அமித்ஷா நாள் குறித்துவிட்டார், வரக்கூடிய ஆட்சி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியாக அமையும். வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில், ஒவ்வொரு வீட்டு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும், அமைச்சர் பொன்முடியின் பேச்சை கவனத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும். அமைச்சர் பொன்முடி மீது முதல்வர் ஸ்டாலின் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெறுகிற மக்கள் விரோத ஆட்சி மாற்றப்பட்டு என் .டி .ஏ தலைமையில் புதிய ஆட்சி அமைய அனைவரும் ஆதரவு தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.