"திமுகவே எங்கள் எதிரி கட்சி"- ஈபிஎஸ் கருத்துக்கு நயினார் நாகேந்திரன் ஆதரவு

 
நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதனுடன், தமிழக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.

அடிக்கடி பற்றி எரியும் குப்பைக் கிடங்கு : இந்த ஏற்பாடு செய்து தரனும் - நயினார் நாகேந்திரன் கோரிக்கை..

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நயினார் நாகேந்திரன், புதுச்சேரி ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.‌ திமுக தான் எங்களது எதிரி கட்சி என்று அதிமுக மாநில பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த கருத்து நல்ல கருத்து தான். இந்தக் கருத்தை பாஜக- அதிமுக கூட்டணி அச்சாரமாக எடுத்துக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு சிரித்துக் கொண்டே மௌனமாக சென்றார்.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி குறித்து, இரு கட்சியின் தலைவர்கள் மழுப்பலாக பதில் அளித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின்  கருத்துக்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆதரவு தெரிவித்திருப்பது, இரு கட்சியிடையே கூட்டணிக்கான அச்சாரத்தை ஏற்படுத்தி உள்ளது.