'சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் பாஜக பங்கேற்கும்' - நயினார் நாகேந்திரன்

 
நயினார் நாகேந்திரன்

நாளை நடைபெறும் சிறப்பு சட்டமன்ற கூட்டதொடரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதாக்கள் உள்ளிட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார். அவற்றை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நாளை காலை  நடைபெறுகிறது. இந்த  நிலையில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என்றும் திமுக கொண்டுவரும் தீர்மானத்தை பொறுத்து, பாஜகவின் நிலைப்பாட்டை அங்கு  தெரிவிப்போம் என்றும் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேவைப்படும் பட்சத்தில் வெளிநடப்பு செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.